விருதுகள் வேண்டாம் விசில் சத்தம் போதும் : சிம்பு


நடிகர் சிம்பு சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு துவங்கிய வாலு படத்தில் பிசியாக உள்ளார். இப்படத்திற்கான அறிமுக டீஷர் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. ஆனால் அதில் வரும் வசனங்கள் தனுஷை தாக்குவது போல் அமைந்துள்ளது. இப்படத்தில், சிம்புவைப் பார்த்து ஹன்சிகா, ஒரு சில பசங்கள பாக்க பாக்கத்தான் புடிக்கும், ஆனா உன்ன மாறி பசங்கள பாத்த உடனே புடிச்சிடும் என்று வசனம் பேசுகிறார் பாலா, செல்வராகவன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க நான் விரும்பமாட்டேன். அதுபோன்ற கதைகளில் தனுஷ் வேண்டுமானால் நடிப்பார். அவர் தான் நடிகன். என் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்குப் படங்களாக இருக்கும். எனக்கு தேசிய விருதோ, ஆஸ்காரோ தேவையில்லை. என் படங்கள் ஓடும் திரையரங்குகளில் விசில் சத்தமும், கைதட்டலும் கேட்டால் போதும் என்று கூறுகிறார் சிம்பு.

Source : Dinamani