Simbu resumes Achcham Enbadhu Madamaiyada



Actor Silambarasan aka Simbu, who is back from a short holiday in London, joined the sets of Gautham Vasudev Menon's Tamil romantic-drama "Achcham Enbadhu Madamaiyada" on Tuesday.

"Simbu has joined the team for the new schedule. The crew plans to shoot non-stop for the next few weeks to complete the film," a source from the film's unit told.

Simbu is paired with debutante Manjima Mohan in the film, which has music by AR Rahman."Achcham Enbadhu Madamaiyada" is simultaneously being shot with actor Akkineni Naga Chaitanya in Telugu.

Meanwhile, Simbu will soon wrap up a pending song from his upcoming Tamil film "Vaalu", which is slated for release on July 17.

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இணையத்தில் தொடர்ச்சியாக சண்டையிட்டு வரும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, ட்விட்டர் தளத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஹெஷ்டேக் ஒன்றை உருவாக்கி தங்களது நடிகருக்கு பிறந்த நாள்
வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். அதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள், அதற்கு பதிலடியாக விஜய்யை கிண்டல் செய்யும் விதமாக ஒரு ஹெஷ்டேக்கை உருவாக்கி விஜய்யை கிண்டல் செய்து வந்தார்கள். 


அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ஹெஷ்டேக் இந்தியளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட்டாக ஆரம்பித்தது. ட்விட்டர் பயனீட்டாளர்கள் அனைவரும் இரண்டு ரசிகர்களின் மோதலை விமர்சித்து வருகிறார்கள். இம்மோதல் குறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒரு
உண்மையான தல ரசிகனாக நான் முன்வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், எதிர்மறை ஹேஷ் டேகுகளை தவிர்க்க வேண்டும் என்பதே. ஏனெனில், அது நம் நோக்கம் அல்ல. அதேபோல், விஜய் அண்ணா ரசிகர்களுக்கும் நான் முன்வைக்கும்
கனிவான வேண்டுகோள், மற்றவர்களை நைய்யாண்டி செய்து அவர்கள் மனதை புண்
படுத்தக்கூடாது என்பதே. நீங்கள் விரும்பும் நட்சத்திரத்துக்காக நீங்கள் செய்ய விரும்புவது 


இத்தகைய செயலைத்தானா...எனவே சிறிய, பெரிய என அனைத்து நட்சத்திரங்களின் விசிறிகளும் தங்கள் அன்புக்குரிய நட்சத்திரை ஆதரிப்பதை மட்டுமே செய்க, மற்றவர்களை தாழ்த்த வேண்டாம். ஒவ்வொரு ரசிகருமே தங்களது நாயகர்களுக்கு ஆதரவாக, மற்றொருவருக்கு எதிராகவும் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உங்களுடைய ஆற்றலையும், நேசத்தையும் நேர்மறை வழியில் வெளிப்படுத்த வேண்டும். எதிர்மறை வழிமுறை வேண்டாம்.
கிண்டல்களையும், கேலிகளையும் என்னால் பயன்படுத்தி கொண்டு இருக்க முடியும். ஆனால் முதர்ச்சியுடனும், மனிதத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். 


அது தான் நம்முடைய இயல்பு. இந்த பிளவு தான் நமது உண்மைத்தன்மையில் இருந்து பிரித்துவிடுகிறது. நாமும் நமது சுய அடையாளத்தை இழந்து விடுகிறோம். சாதி, மதம், தேசம் இவற்றை எல்லாம் கடந்து மனிதர்களை மதிக்க முதலில் கற்றுக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

Vaalu Todays Media Poster


STR via Twitter


STR : Many more happy returns of the day to my dear brother‪#‎Ilayathalapathy‬ Vijay anna ... Wish him great success .. god bless 😊

நிறைய கஷ்டங்களை கடந்து வந்துவிட்டேன்: சிம்பு நேர்காணல்



கடந்த சில ஆண்டுகளாக சினிமா ரேஸில் இருந்து சற்று விலகியிருந்த சிம்பு, தற்போது மீண்டும் சிலிர்த்தெழுந்துள்ளார். ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘கான்’, அமீரின் இயக்கத்தில் ஒரு படம் என்று திரையரங்கில் சரவெடி வெடிக்க தயாராக இருக்கிறார். தொடர் படப்பிடிப்புகளுக்கு நடுவில் சில நாட்கள் ஓய்வில் இருக்கும் சிம்புவை சந்தித்தோம். 

இரண்டரை வருட இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபடுவது கஷ்டமாக இல்லையா? 

ஒரு கஷ்டமும் இல்லை. இதற்கு முன்பும் நான் இப்படி தொடர்ச்சியாக நடித்தவன்தானே? இந்த ஓய்வும் நானாக தேடிக்கொண்டதல்ல. அதுவாகவே அமைந்தது. இப்போது மீண்டும் பரபரப்பான வாழ்க்கையை வாழத் தொடங்கியிருக்கிறேன். இந்த வாழ்க்கை சந்தோஷமாக நகர்கிறது. எப்போதுமே வாழ்க்கையை அதன் போக்கில் அணுகுவதுதான் என் வழக்கம். கடந்த 2 வருடங்களில் எதுவுமே இல்லாத வாழ்க்கையைப் பார்த்துவிட்டேன். இப்போது காலையில் கெளதம் மேனனின் படம், இரவு செல்வராகவனின் படம் என்று பரபரப்பாக வாழ்க்கை நகர்கிறது. இதையும் நான் ரசித்துத்தான் செய்கிறேன்.
‘படையப்பா’ படத்தின் பாடலில், ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா’ என்று ஒரு வரி வரும். அதேபோல இப்போது நான் வியர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொரு படத்தின் பலனும் விரைவில் திரையில் தெரியும். 

‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீங்கள் பட்ட பல கஷ்டங்களைச் சொல்லி வருத்தப்பட்டீர்கள். அதைக் கேட்டு வீட்டில் என்ன கூறினார்கள்? 

அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் சந்தானத்துக்காக கலந்துகொண்டேன். எந்தவொரு நிகழ்ச்சியிலும் என்ன பேச வேண்டும் என்று தயார் செய்யும் வழக்கம் எனக்கு கிடையாது. என் மனதில் பட்டதை பேசுவேன். அந்த நிகழ்ச்சியிலும் என் மனதுக்குப் பட்டதைப் பேசினேன். கடந்த இரண்டரை வருடங்களில் நான் பட்ட கஷ்டங்களைப் பற்றி பேசினேன்.
சாதாரண மக்களைப் போல் என்னால் கடற்கரை, ஸ்பென்சர், சத்யம் சினிமாஸ் என்று சுற்ற முடியுமா? 700 நாட்கள் சும்மாவே 4 சுவர்களுக்குள் வாழ்வது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த நாட்களை எப்படி கடந்து வந்தேன் என்பதைத்தான் நான் அன்றைய நிகழ்ச்சியில் பேசினேன். என் அம்மாவும் அப்பாவும் அதற்கு வருத்தப்பட்டார்கள். “ஏன் இப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறாய்? உனக்கு என்ன இல்லை” என்று கேட்டார்கள். அவ்வளவுதான்.
இந்த இருண்ட வாழ்க்கையில் இருந்து வெளியே வருவோம் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது என் ரசிகர்கள்தான். அவர்களை என்றைக்குமே நான் மறக்க மாட்டேன். அதே போல “ப்ரோ.. இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்காதீங்க. சனிக்கிழமையாவது வெளியே வாங்க” என்று திட்டி வெளியே கூட்டிக்கொண்டு போனது அனிருத்தான். 

நீங்கள் எப்போதுமே படப்பிடிப்புக்கு லேட்டாக வருவதாக சொல்கிறார்களே? 

நான் லேட்டாக போகிறேன் என்றால் நான் நடித்து இத்தனை படங்கள் எப்படி வெளியானது. அப்படிச் சொல்பவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும். சிம்பு தாமதமாக வருவார் என்று சொல்லும் இயக்குநர்களிடம், சிம்பு எத்தனை மணிக்கு கிளம்புவார் என்ற கேள்வியைக் கேளுங்கள். அவர்கள் சொல்லும் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். சில நாட்கள் நான் தாமதமாக சென்றாலும், முழுக் காட்சிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டுதான் திரும்பியிருக்கிறேன். லேட்டாக வந்துவிட்டு 6 மணிக்கே கிளம்பவேண்டும் என்று நான் சொன்னதில்லை. 

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ‘கான்’ பட அனுபவம் எப்படி இருக்கிறது? 

ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்கிறேன். நீங்கள் இதுவரை பார்த்த செல்வராகவன் படங்களில் இருந்து இந்தப் படம் மாறுபட்டு இருக்கும். ஒரே ஒரு விஷயம் சொல்லவா.. இதுவரை நீங்கள் ஹீரோக்களை உருவாக்கிய செல்வராகவன் படங்களைத்தான் பார்த்திருப்பீர்கள். இப்போது முதல் முறையாக செல்வராகவன் ஒரு ஹீரோவுக்காக படம் பண்ணுகிறார். இந்தப் படத்தைப் பற்றி இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். 

‘இது நம்ம ஆளு’ படத்தில் என்ன பிரச்சினை. ஏன் இந்த தாமதம்? 

‘வாலு’ படம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. ஒரு படம் பிரச்சினையில் இருக்கும் போது, அந்தப் படத்தை அப்படியே விட்டு விட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்துவது முறையல்ல. நிறைய படங்கள் அதேபோல நிற்கிறது. ‘வாலு’ படத்தை நானே வாங்கி பிரச்சினைகளை முடித்துள்ளேன். இப்படம் வெளியானவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான தேதியை அறிவிக்க உள்ளேன். ‘இது நம்ம ஆளு’ படத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது என்பதுதான் உண்மை. படத்தின் 2 பாடல் காட்சிகளை மட்டும் காட்சிப்படுத்த வேண்டியுள்ளது. மற்றபடி படம் தயார். ‘வாலு’வைத் தொடர்ந்து ‘இது நம்ம ஆளு’ வெளியாகும். இரண்டுமே எனக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

நீண்ட நாட்கள் கழித்து வெளியாகவுள்ள ‘வாலு’ படம் எப்படி இருக்கும்? 

நிறைய கமர்ஷியல் படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஹீரோ, வில்லனை ஏன் அடிக்கிறான் என்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலம். அந்த பலம் ‘வாலு’வில் மிக அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமன்றி, நான் நாயகனாக நடித்த படம் 3 வருடங்கள் கழித்து வெளியாகிறது. என் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ‘வாலு’ படத்தில் இருக்கும். இது ஒரு புதுமுக இயக்குநரின் படம் போலவே இருக்காது. இப்படம் வெளியானதும் அதன் இயக்குநர் விஜய் சந்தர் ஒரு நல்ல கமர்ஷியல் இயக்குநராக உருவெடுப்பார்.

மீண்டும் காதலில் விழும் திட்டம் இருக்கிறதா? 

தெரியவில்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறேன். என்னுடைய வேலையை காதலித்து கொண்டிருக்கிறேன். மீண்டும் காதலிப்பேனா என்று எனக்குத் தெரியாது. எனக்கானவளை நான் பார்க்கும்போது மீண்டும் காதலில் விழலாம். 

எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? 

முதலில் காதலைப் பற்றிக் கேட்டீர்கள். இப்போது திருமணத்தைப் பற்றி கேட்கிறீர்கள். இதற்கும் தெரியாது என்பதுதான் என் பதில். இப்போது இருக்கும் சமூக சூழ்நிலைகளைப் பார்க்கும்போது கல்யாணம் அவ்வளவு எளிது அல்ல என்பது மட்டும் புரிகிறது. ஏதோ ஒரு பெண்ணைப் பார்த்தார்கள், கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்பது கஷ்டம். எனக்காக ஒரு பெண் வந்து, இருவரும் முழுமையாக புரிந்துகொள்ளும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் என் கல்யாணம் நடக்கும். 

இவ்வளவு வெளிப்படையாக பேசும் நீங்கள் உங்களைப் பற்றிய சர்ச்சைகளுக்கு ஏன் விளக்கம் கொடுப்பதில்லை? 

உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். பொய்க்கு விளக்கம் கொடுத்தால், அந்தப் பொய் உண்மையாகிவிடும். வாரத்துக்கு ஒரு முறை என்னைப் பற்றி ஏதாவது எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால், பிறகு நான் அந்த வேலையை மட்டுமே பார்க்க வேண்டிவரும். மேலும் அதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தால் சிம்பு கெட்டவனாகி விடுவான். என்னை பொறுத்தவரை எனக்கென்று சில ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரசிக்கிற மாதிரி படங்கள் செய்தாலே போதும். என்னை நம்பி வரும் இயக்குநர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தாலே போதும். 

- THE HINDU(TAMIL) Daily News Paper Dated 17-June-2015

Directors Suseenthiran & Thiru #INA


STR‬ to join hands with Director ‎Ameer


STR‬ to join hands with Director ‪‎Ameer‬ of  ‎MounamPesiyadhe‬ ‪‎Raam‬ & ‎ParuthiVeeran‬ for a rusty rural subject. Official confirmation to come soon.

‎VettaiMannan‬


When a cute, chubby actress comes together with a handsome hunk for a film, it becomes pure magic. Here, we are talking about Hansika - Simbu's Vettai Mannan, which was launched quite a few years back but is stuck in the cans now. After Vaalu, this film is another much-anticipated one among loyal STR fans.

Directed by debutant Nelson, Vettai Mannan has some interesting facets. Talking about the characters in the film, a close source from the team said that Simbu plays a small-time local gangster. Whereas, Hansika is a high-tech racketeer, who, during the course of the movie ends up training Simbu to master the use of weapons and also grooms him.

Can you imagine some intense close-up shots of the two learning and unlearning? Yes, let's keep up our imagination and await the film's release date!

Source :- behindwoods.com 

'கெட்டவன்' படத்தை மீண்டும் துவங்கும் திட்டமில்லை என்று சிம்பு தெரிவித்தார்.


நந்து இயக்கத்தில் சிம்பு, லேகா வாஷிங்டன் உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் 'கெட்டவன்'. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருந்த இப்படத்தை பரதன் பிலிம்ஸ் தயாரித்தது. இயக்குநருக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படம் பாதியில் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சில நாட்களாக, நந்து சிம்புவை சந்தித்ததாகவும், மீண்டும் 'கெட்டவன்' படத்தை துவங்க இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. மேலும், நயன்தாராவிடம் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது "'கெட்டவன்' படத்தை மீண்டும் துவங்கும் திட்டம் எல்லாம் கண்டிப்பாக இல்லை. தற்போது 'அச்சம் என்பது மடமையடா', செல்வராகவன் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறேன். இப்படங்களின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்று (11/6/2015) சென்னை வந்துவிடுவேன். அதனைத் தொடர்ந்து 'வாலு' வெளியீட்டு தேதியை முடிவு செய்து அறிவிக்க இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

Official : ‪‎Vaalu‬ release world wide on July 3rd !



TR :- 100% CONFIRMED DATE !! Enough of waiting & enough of crap jokes !!!

Achcham Enbadhu Madamaiyada Shooting at brisk pace



Tamil actor STR, Gautham Menon and music director AR Rahman, known for their collaboration in Vinnaithaandi Varuvaaya teamed up for the second time for Achcham Enbadhu Madamaiyada. And the same is being done in Telugu by Naga Chaitanya yet again.

Achcham Enbadhu Madamaiyada that revived or restarted shooting with new heroine Manjima Mohan is based on a road trip. Gautham Menon had recently shot for a song regarding the same.

After the blockbuster VTV / Yem Maya Chesave in Telugu, audiences are expecting on more musical romantic entertainer in this combo. AEM is said to be heading towards completion. Makers are planning to release the movie by the end of 2015 or the beginning of 2016.

Don’t Blame Kuralarasan For Delayed Release


Taapsee to play a cop in Selva's film?


Simbu opens up to fans on Twitter


Simbu, Tapsee come together!


என் திருமணம் ஆண்டவன் முடிவு படி நடக்கும் : சிம்பு


சிம்புவின் இரு காதல்கள் தோல்வியில் முடிந்தன. முதல் காதல் நயன்தாராவுடன் நடந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் ஹன்சிகாவுக்கும் சிம்புவுக்கும் காதல் மலர்ந்தது. அதுவும் சில நாளிலேயே முறிந்து விட்டது. இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை என்ற மன நிலையில் தற்போது சிம்பு இருக்கிறார். 

இந்த நிலையில் இணையதளத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிம்பு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:– எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்கிறார்கள். ஆண்டவன் தான் அதுபற்றி முடிவு செய்ய வேண்டும். 

நான் நடித்த ‘வாலு’ படம் ஜூன் 26 அல்லது ஜூலை 3–ந் தேதி ரிலீசாகும். ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்க உள்ளது. செல்வராகவன் படத்தில் நடிப்பதன் மூலம் அவரிடத்தில் இருந்து நிறைய கற்று வருகிறேன். 

எனக்கு பிடித்த இயக்குனர்கள் சேகர் கபூர், ராஜமவுலி. இந்த வருடத்தில் நான் நடித்த 3 படங்களை ரிலீசுக்கு வர உள்ளன. அஜீத்துடன் இணைந்து நடிப்பீர்களா? என கேட்கிறார்கள். அஜீத் எப்போது என்னை அழைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். 

தனுசும், நானும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். விஜய் என்னுடைய அண்ணனாகவும் நண்பராகவும் இருக்கிறார். என்னைப்பற்றி எல்லோரும் தவறாக பேசுகிறார்களே? என கேட்கின்றனர். நேரம் நன்றாக இருந்தால் நல்லவிதமாக பேசுவார்கள். 

எனக்கு பிடித்த கதாநாயகி அலியா பட். அப்பா இயக்கத்தில் ‘ஒரு தலை ராகம்’, ‘மைதிலி என்னை காதலி’ எனக்கு பிடித்த படங்கள். சினிமாவில் எல்லா துறைகளும் எனக்கு தெரியும். ஆனால் அரசியல் தெரியாது. 

நான் நடிக்கும் ‘வேட்டை மன்னன்’ படம் கண்டிப்பாக வரும். அதன் டிரைலரை ‘வாலு’ படத்தின் இடைவேளையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு சிம்பு கூறினார்.

Source : MAALAIMALAR Daily Evening Tamil News Paper Dated 03-June-2015