சிந்து சமவெளி , அரிது அரிது , படங்களின் ஹீரோ ஹரீஷ் கல்யாண் , நிருபர்களிடம் கூறியதாவது : இப்பொழுது கருணாஸ் , ஸ்வேதா பாசு நடிக்கும் ' சந்தமாமா ' படத்தில் நடித்து வருகிறேன் . எங்கள் மூவரையும் சுற்றி பின்னப்பட்ட கதை . எழுத்தாளராக கருணாஸ் , பாடகனாக நான் நடிக்கிறேன் . இப்படத்தை பெரிதும் எதிர்பார்கிறேன் . நியூ இயரை வரவேற்கும் விதமாக நான் எழுதி , இசைஅமைத்து , பாடிய ' குட்டி பெக்' ஆல்பத்துக்கு வரவேற்ப்பு கிடைத்துள்ளது , அதை வீடியோ ஆல்பமாக உருவாக்கும் எண்ணம் இருக்கிறது . சிம்பு'தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் . விரைவில் புது ஆல்பம் வெளிட உள்ளேன் .