




அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவருடைய எந்த படம் வெளிவந்தாலும் அதை முதல்நாளில், முதல்ஷோவில் பார்த்துவிடுவார். அந்தளவுக்கு அஜித்தின் தீவிர வெறியரான அவர் இப்போது ஒருபடி மேலே போய் அவரது கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார்.
புதுமுகம் விஜய் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படம் வாலு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். கூடவே காமெடியில் சந்தானம் கலக்க வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது.
படத்தின் கதைப்படி சிம்பு தனது காதலி ஹன்சிகாவுடன் அஜித்தின் பில்லா-2 படத்தை முதல்நாளில் போய் தியேட்டரில் பார்க்கிறார். இந்தக்காட்சியை சென்னை கமலா தியேட்டரில் வைத்து எடுத்தனர். அப்போது தான் சிம்பு அஜித்தின் பில்லா-2 கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து இருக்கிறார். பிறகு ஹன்சிகாவுடன் அமர்ந்து படத்தையும் பார்க்கிறார். இதைதான் படமாக்கி இருக்கிறார்கள். கூடவே படத்தில் அஜித் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும், அவரை பற்றி பஞ்ச் டயலாக் கொடுத்து புகழ்ந்து தள்ளியுள்ளாராம்.
source : DINAMALAR
உதவி இயக்குநராகும் ஆசையில், சிவகங்கையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் சினிமாவில் இருக்கிறார். ராசி படம் தொடங்கி குஷி, ரெட், வில்லன், வரலாறு, காளை, ரேணிகுண்டா என்று பல படங்களை தயாரித்தவர்,
இப்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை எடுத்து வருகிறார். இதனையடுத்து மீண்டும் சிம்புவை வைத்து, புதுமுகம் விஜய்சந்தர் இயக்கத்தில் வாலு என்ற படத்தை தயாரிக்கிறார்.
சமீபத்தில் அவரை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது, 30 வருட சினிமா அனுபவத்தில், சினிமா ஒரு நல்ல வளர்ச்சியில் உள்ளது. ஆரோக்கியமாக இருக்கு. நிறைய புதுமுகங்கள் வராங்க, போறாங்க ஆனால் சினிமா அப்படியேத்தான் இருக்கு. படத்திற்கு என்ன தேவையோ அது தான் பட்ஜெட்டை முடிவு செய்யும். மற்றபடி சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்று எந்த படத்தையும் பிரிக்க முடியாது.
சிம்புவை வைத்து எப்படி தொடர்ந்து படம் பண்ண முடியுது என்று அவரிடம் கேட்டால், காளை படம் 80 நாளில் முடிந்தது. வேட்டை மன்னன் படம் இடைவேளை வரை முடிந்து இருக்கிறது. சிம்புவிடம் இன்று இத்தனை எடுக்கணும் என்று முன்னாடியே சொல்லிவிட்டால் போதும், அதை அப்படியே முடித்து கொடுத்துவிடுவார். சிம்புவால் என் படங்கள் தாமதம் ஆனதே கிடையாது.
மேலும் நான் அஜித்தை வைத்து நிறைய படங்கள் எடுத்தேன். ஆனால் இப்போது அவர் பட வியாபாரம் பெரிய அளவில் போய்விட்டது. அதனால் என்னால் முடிந்த அளவிலான பட்ஜெட்டில் படம் எடுத்து வருகிறேன். அதுவே எனக்கு திருப்திகரமாக இருக்கிறது. என் மகனின் 18 வயசு படம் விரைவில் வெளிவர உள்ளது. இப்போதெல்லாம் புதுபடங்கள் வருவது அதிகமாகி கொண்டு போவது நல்ல விஷயம் தான். சினிமா எனக்கு ஒரு பேஷன். கடைசி வரை சினிமாவில் இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
source : தினமலர்
நடிகர் சிம்பு சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு துவங்கிய வாலு படத்தில் பிசியாக உள்ளார். இப்படத்திற்கான அறிமுக டீஷர் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. ஆனால் அதில் வரும் வசனங்கள் தனுஷை தாக்குவது போல் அமைந்துள்ளது. இப்படத்தில், சிம்புவைப் பார்த்து ஹன்சிகா, ஒரு சில பசங்கள பாக்க பாக்கத்தான் புடிக்கும், ஆனா உன்ன மாறி பசங்கள பாத்த உடனே புடிச்சிடும் என்று வசனம் பேசுகிறார் பாலா, செல்வராகவன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க நான் விரும்பமாட்டேன். அதுபோன்ற கதைகளில் தனுஷ் வேண்டுமானால் நடிப்பார். அவர் தான் நடிகன். என் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்குப் படங்களாக இருக்கும். எனக்கு தேசிய விருதோ, ஆஸ்காரோ தேவையில்லை. என் படங்கள் ஓடும் திரையரங்குகளில் விசில் சத்தமும், கைதட்டலும் கேட்டால் போதும் என்று கூறுகிறார் சிம்பு.
Source : Dinamani
Finally, Silambarasan aka Simbu's 'Podaa Podi' will see an audio launch. Sony music has now acquired the music rights of this romantic musical. A press note states that the music will be unveiled in a few weeks.The musical stars Simbu and Varalakshmi Sarathkumar in the lead roles and marks the latter's foray in Tamil cinema.The album consists of six tracks, including a few theme tracks and a Bhangra number by T Rajendar aka TR! STR has crooned two songs and penned the Bhangra number while Yuvan Shankar Raja has also sung a song for his dear friend; STR. Music is composed by Dharan.The title song is sung by Benny Dayal and Andrea Jeremiah. 'Podaa Podi' by debutant Vignesh Shivaa, is a romantic musical on a couple in three stages of life.
Varalakshmi Sarath Kumar has been waiting long for her first release, and the wait is almost over. With the teaser releasing this month, Podaa Podi can be expected soon. Varalakshmi Sarath Kumar, who plays the love interest of STR in this film opened up about the film in a recent interview. The daughter of Sarath Kumar plays a mother in the film. For an actress who is looking for a good opening in the film industry, this might prove risky. But the actress doesn’t feel so. Instead she says, “This film is a beautiful love story,like Alaipayudhe. This film has given me the scope to perform both as a teen age girl and a mom. I consider this as an opportunity to prove myself as a versatile actor.”
source : Behindwoods