சிம்பு முருக பக்தராக நடிப்பதாக கூறப்படுகிறது



செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக டாப்சி, கேத்ரீன் தெரசா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், ஜகபதி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு முதலில் கானகம் என்று தலைப்பு வைத்திருந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘கான்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கானகம் என்றாலும் கான் என்றாலும் காடு என்றே பொருள்படும். எனவே, கானகம் என்பதை கான் என்று சுருக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், இப்படத்தில் சிம்பு முருக பக்தராக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே நிஜவாழ்க்கையிலும் ஆன்மீகத்துக்கு மாறிவிட நினைத்துக் கொண்டிருக்கும் சிம்பு, இந்த படத்தில் முழு ஆன்மீகவாதியாகவே நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், டாப்சி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக்ஷன் திரில்லர் பாணியில் இப்படம் தயாராகி உள்ளது.


இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார் சிம்பு.