சிம்புவுக்கு தைரியம் கொடுத்த அஜித்



இணையத்தில் தற்போதைக்கு சூடான தகவலாக சுற்றி வருவது ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியவைதான். தனது நிலை குறித்து சிம்பு பேசும்போது, 

நான் நடித்த படம் வெளியாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இந்த இரண்டரை ஆண்டுகளில், நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். ஆன்மிகம் பக்கம் நான் திரும்பி விட்டதாக கூறினர்.. கடவுளைத் தேடித்தானே போனேன். ‘பிகரை’ தேடிப்போகவில்லையே. என்னை கஷ்டம் இல்லாமல் வளர்ந்தவர் என்று அனைவரும் சொல்வார்கள். சாதாரண மனிதனின் கஷ்டம் எப்படி இருக்கும்? என்பதை இந்த இரண்டரை வருடத்தில் நானும் கற்றுக் கொண்டேன்.

கடந்த இரண்டரை வருடங்களில் என்னை விட்டு எல்லாமே போய் விட்டது. நான் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் அம்மாவிடம் கொண்டு போய்தான் கொடுப்பேன். இப்போது, செலவுக்கு அம்மாவிடம் போய் காசு கேட்கும் நிலையில் நான் இருக்கிறேன். அம்மாவிடம் காசு கேட்க கஷ்டமாக இருக்கிறது.என்னை விட்டு படம் போய் விட்டது. பணமும் போய் விட்டது. என மனம் திறந்து பேசியுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பின் இடையில், அஜித் படத்திற்காக இந்த படத்தை பாதியில் நிறுத்திவிட்டு ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு சிம்பு படத்தை இயக்குகிறேன் என கூறியுள்ளார் கௌதம் மேனன் . சிம்புவும் சரி என ஒப்புக்கொண்டார். அந்த வேளையில் டி.ராஜேந்தர் இதை ஏற்றுகொள்ளாது போகவே , அஜித் தான் முன்வந்து ’கவலை வேண்டாம்’, கண்டிப்பாக சிம்பு சிறப்பான உயரங்களை அடைவார் என கூறியுள்ளார். இதை சிம்பு அதே இசை வெளியீட்டு விழாவில் பதிவு செய்துள்ளார். 

- http://www.vikatan.com/cinema/article.php?aid=46395