வாலு - விஜய் சந்தர்





இந்த மாதம் ஆடியோ ரிலீஸ், பொங்கலுக்கு டிரெய்லர், பிப்ரவரியில் படம் என்று வாலுஇறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம்.

என்னடா இவ்வளவு நாளா படம் எடுக்குறாங்க..
அப்படி என்ன தான் படத்துல இருக்குஎன்று பலரும் நினைக்கலாம். அவர்களுக்கு என் பதில்,


பொங்கலுக்கு டிரெய்லர் பாருங்க.. உங்களுக்கே தெரியும். படம் அவ்வளவு மாஸா வந்திருக்குஎன்பதுதான்.

இந்தப் படம் ஒரு ஒயின் பாட்டில் மாதிரி. நீங்க எத்தனை நாள் அதை மண்ணுக்குள்ள புதைச்சு வைச்சாலும், வெளியே எடுக்குறபோது ஒரு டேஸ்ட் இருக்கும் தெரியுமா.. அப்படித்தான் என் வாலுபடமும் இருக்கும்.

முதல் படத்தையே எதற்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் திட்டமிட்டீர்கள்?

நான் கதை சொன்ன தயாரிப்பாளர்களும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். வேறு ஏதாவது கதையைச் சொல்லுங்கள். இந்த கதைக்கு பட்ஜெட் அதிகமாகும்என்று சொன்னார்கள். சரியென்று சொல்லி வேறு ஏதாவது கதை எழுதினால்கூட முடிக்கிற போது பெரிய பட்ஜெட்டாக நிற்கிறது.

வாலு' எப்படி ஆரம்பிச்சீங்க..?

கண்டிப்பா தமன் மற்றும் சந்தானம் தான் வாலுக்கு காரணம். அவர்கள் இல்லாவிட்டால் வாலுஇல்லை. ஒரு நாள் இரவு தமன் ஸ்டூடியோ அருகில், அரை மணி நேரம் சிம்புவிடம் இந்தக் கதையைச் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு நாம் இதைப் பண்ணுவோம் என்று அவர் கூறினார். இந்தப் படத்தை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர் சிம்புதான். விஜய் சந்தர், இயக்குநர் விஜய் சந்தரா உருவானதற்கு தமன், சிம்பு, சந்தானம் மூவருக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கேன்.

சிம்பு - ஹன்சிகா காதல் உருவான தற்கு உங்க படம்தான் காரணமாமே?

சிம்பு - ஹன்சிகா இரண்டு பேருமே ட்விட்டரில சொன்னதுக்கு பிறகுதான் அவங்க லவ் பண்றாங்கன்னே எனக்கு தெரியும். படத்தோட எடிட்டிங்ல லவ் சீன் எல்லாம் பார்க்கிறபோது நிஜக் காதலர்கள் மாதிரியே தெரிஞ்சுது. அவங்க ரெண்டு பேரும் உண்மையில் காதலிப்பதால்தான் காட்சிகள் அழகாக வந்திருக்கிறதோ என்று யோசித்தேன்.