சிம்பு படத்தில் சுனைனா


சிம்புவின் மன்மதன்-2 படத்தில் நடிக்க சுனைனாவிடம் திகதிகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகை சுனைனா, தற்போது சீனு ராமசாமியின் படமான நீர்பறவையில் நடித்து முடித்திருக்கிறார்.இருப்பினும் அவரிடம் இன்னும் நான்கு படங்கள் கையில் இருக்கிறது. ஏற்கனவே நிதிப்பிரச்சினையால் சிக்கிய திருத்தணி படம் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.இதற்கிடையில் கதிர்வேல், விஷாலுடன் சமர் படங்கள் உருவாகி வருகின்றன.ராசுமதுரவன் இயக்கத்தில் உருவான பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் படம் சிறுபிரச்சினை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில்தான் சுனைனாவுக்கு சிம்பு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.அடுத்த வருடம் சிம்புவே இயக்கி நடிக்கும் மன்மதன்-2 படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவாராக சுனைனாவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் சுனைனாவின் சம்மதம் தொடர்பான தகவல் எதுவும் வெளிவரவில்லை.