டிஸ்னிலேண்டில் சிம்பு பட சூட்டிங்!


சிம்பு, வரலட்சுமி நடித்து வரும் போடா போடி படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஹாங்காங்கில் டிஸ்னி லேண்டில் நடைபெற்றுள்ளது.டிஸ்னி லேண்டில் நடைபெற்ற முதல் இந்தியப் படத்தின் சூட்டிங் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சிம்பு கூறுகையில் : நான் சிறு வயதில் இருந்து பார்த்து ரசித்த கார்ட்டூன் கேரக்டர்களுடன் ஆடிப்பாட வாய்ப்பு கிடைக்கும் என நான் சிறிதும் நினைக்கவில்லை. டிஸ்னி லேண்ட் சூட்டிங் அனுபவம் மிகவும் பிரமாண்டமானது. அங்கு சூட்டிங் நடத்துவதற்கு அனுமதி பெற 90 நாட்கள் காத்திருந்தோம். பாடல் சூட்டிங் குறித்த முழுமையான விளக்கத்தை அளித்த பின்னரே அனுமதி கிடைத்தது.இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறேன் என்றார்.

- தினமலர்