தொடர்ச்சியாக என் படங்களில் நடிக்க ஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை என்கிறார் சிம்பு. சிம்பு நடிக்கும் ‘வேட்டை மன்னன்' படத்தை தொடர்ந்து ‘வாலுÕ படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. சிம்புவின் சிபாரிசால் மீண்டும் ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது பற்றி சிம்பு கூறியதாவது: இப்போதெல்லாம் சந்தோஷமாக இருக்கிறீர்களே... யாரையாவது காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். நான் சந்தோஷமாக இருந்தால் மற்றவர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ என்னவோ? இந்த உலகத்தில் எனக்காக ஒருத்தி பிறந்திருப்பாள். அவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவரை கண்டுபிடிக்கும்வரை எனது தேடல் தொடரும். இப்போதைக்கு நடிப்பு, நடிப்பு, நடிப்புதான்.
‘வாலு' படம் தொடங்குகிறது. சமீபத்தில் இப்படத்திற்காக ஹன்சிகா, சந்தானத்துடன் பங்கேற்ற போட்டோ ஷூட்டும், சிறிய டிரெய்லரும் தயாரானது. விரைவில் அது வெளியிடப்படும். ‘வேட்டை மன்னன்Õ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய நீண்ட ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. வாலு படத்தில் ஹன்சிகா மீண்டும் ஹீரோயினாக நடிக்க சிபாரிசு செய்தது ஏன் என்கிறார்கள். அவருக்கு நான் சிபாரிசு செய்யவில்லை. அதற்கு எனக்கு அவச¤யமில்லை. இயக்குனர்தான் ஹன்சிகாவை தேர்வு செய்தார். வாலு படம் காமெடி மற்றும் யூத்தை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்திற்கு ஹன்சிகா பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் தீர்மானித்து தேர்வு செய்தார். இவ்வாறு சிம்பு கூறினார்.