குடிசை இழந்த ஸ்லம்டாக் ரூபினாவிற்கு வானம் பட குழுவினர் பண உதவி அளித்தனர். மும்பையில் பந்த்ரா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள நூற்றுக்கணக்கான குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின. அதில் ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த சிறுமி ரூபினா அலியின் வீடும் தீ விபத்தில் சிக்கியது.
டைரக்டர் க்ரிஷ் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் வானம் படத்தின் பாடல் காட்சிக்காக மும்பையில் 1 கோடி ரூபாய் செலவில் செட் போட்டு சூட்டிங் நடைபெற்று வந்தது. இப்படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் வாங்கியிருக்கிறது.
பந்த்ரா குடிசை தீ விபத்தில் சிறுமி ரூபினா அலியின் வீடு பறிபோனதை அறிந்த சிலம்பரசன் மற்றும் துரை தயாநிதி அழகிரி, அவரை தேடி கண்டுபிடித்து வானம் படத்தின் ஆடியோ உரிமைபெற்ற வீனஸ் ஆடியோஸ் அலுவலகத்திற்கு வரவழைத்தார். பின்னர் ரூபினா அலிக்கு ரூ.50ஆயிரம் ரொக்கபணத்தை கொடுக்க ஏற்பாடு செய்தார். இதனை நடிகர் சிம்பு, ரூபினாவிடம் கொடுத்தார். அதேபோல் வீனஸ் ஆடியோ கம்பெனி டைரக்டர் சம்பக்கும் தன் பங்கிற்கு ரூ.21 ஆயிரம் நிதியுதவி செய்தார்.