சிம்பு வாய்ப்புத் தந்தார் : ரீமிக்ஸ் மாமா



'அவதார்ட்ரெய்லர் முதல் 'டங்கா மாரி ஊதாரிகுத்துப்பாட்டு வரை அட்டகாசமாக ரீமிக்ஸ் செய்து யூடியூபில் வெளியிட்டு ஆன்லைன் வாசிகளின் 'லைக்ஸ்மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் 'ரீமிக்ஸ் மாமா’. யார் எனத் தேடினால், 20 வயது இளைஞன்தான் இந்த மாமா. 

''யாரு பாஸ் நீங்க? என்ன பண்றீங்க?''
''ஜெகன் ஒரிஜினல் பெயர். சென்னை குருநானக் கல்லூரியில் ஃபைனல் இயர் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சுட்டு இருக்கேன். ஹாலிவுட் படங்கள் எல்லாம் தமிழ் டப்பிங்கில் பார்க்கும்போது சிலர் 'அது நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஒடுங்கனு சீரியஸ் சீனைக்கூட காமெடியாக்கி கடுப்பைக் கெளப்பிக்கிட்டு இருந்தாங்க.

ஒரு படத்துல பாஸ்டர்ட்னு கெட்ட வார்த்தையை தமிழ்ல டப் செய்றேன்னு 'யூ ப்ளடி பாஸ்கர்னு டப் செய்ய, அதுக்கப்புறம் நான் இங்கிலீஷ்லேயே படம் பார்க்க ஆரம்பிச்சேன். சில ஹாலிவுட் படங்கள் பார்த்தப்போ, இந்த சீன்ல நம்ம நடிகர்கள் நடிச்சா செமையா இருக்கும்னு தோணுச்சு. உடனே ஹாலிவுட் பட ட்ரெயிலர் எல்லாம் தமிழ் பட ட்ரெயிலர்களோட ரீமிக்ஸ் செஞ்சு யூடியூப்ல போட்டேன். வீடியோவைப் பார்த்தவங்க எல்லோரும் பாராட்ட ஆரம்பிச்சாங்க. ரொம்ப குஷியாகி, ரீமிக்ஸ் செய்றதுல தீவிரமா இறங்கிட்டேன். ஒன்றரை வருஷத்துல 28 ரீமிக்ஸ் வீடியோ யூடியூப்ல அப்லோடிருக்கேன்.''

''ரீமிக்ஸ் மாமா யாரு வச்ச பேர்?'' 
''ஒரு விஷயத்துக்கு டைட்டில் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம். நாம என்ன சொல்றோங்கிறதை சின்னதா டைட்டில் சொல்லிடணும். லோக்கலா ஒரு பேர் வைக்கலாம்னு தோனுச்சு. 'ரீமிக்ஸ் மாமானு முடிவு பண்ணிட்டேன்.'' 

''காலேஜ் படிச்சுக்கிட்டே எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்குது?''
''நேரம் எல்லாம் பிரச்னையே இல்ல. எனக்கு ஒரு வீடியோ ரீமிக்ஸ் பண்ண ஒரு நாள் போதும். காலேஜ் லீவுல ரீமிக்ஸ் வேலை பண்ணுவேன். இன்னிக்கி வரைக்கும் எங்க காலேஜ் ப்ரொஃபசருக்குக்கூட நான் இதெல்லாம் செய்றது தெரியாது. என் வீட்ல யூடியூப்ல இப்படி ஒரு வொர்க் பண்ணி அனுப்பியிருக்கேன், இவ்ளோ ரெஸ்பான்ஸ் வருதுனு சொன்னவுடனே புரிஞ்சுக்கிட்டாங்க. இப்போ நான் அவங்ககிட்ட ரீமிக்ஸ் பண்ண வீடியோவைக் காட்டிட்டுதான் நெட்லேயே போடுறேன்.''

'' சினிமா நடிகர்கள், ரசிகர்கள் யாரும் உங்களைத் திட்டலையா?'' 
''ஆரம்பத்துல சில தல, தளபதி ரசிகர்கள் திட்டினாங்க. ஒரு தடவை 'நீ ரீமிக்ஸுக்கு மட்டும்தான் மாமாவா, இல்ல ஊருக்கே மாமாவானு திட்டினாங்க. நானும் பதிலுக்கு திட்டினேன்.

'
வாலுபடத்துக்கு 'லவ் என்றவன்பாட்டுல வரிகள் எல்லாம் அட்ராசிட்டி ரகம். அந்தப் பாட்டுக்கு நான் ரீமிக்ஸ் செஞ்சேன். செம ஹிட்.'வாலுபடக்குழுவிடம் இருந்து ஒரு நாள் போன் வந்துச்சு. என்னை நேர்ல பாக்கணும்னு சொல்லிருந்தாங்க. பயந்துட்டே போனேன். சிம்பு சார் கை குலுக்கிப் பாராட்டினார். 'வாலுபடத்துலேயே ஒரு பாட்டுக்கு கான்செப்ட் தரச் சொல்லி சான்ஸ் கொடுத்தார். கான்செப்ட் அனுப்பினேன். நல்லாருக்குனு சொல்லிருக்காங்க. நானே எதிர்பார்க்காம சினிமாவில் ஒரு என்ட்ரி. எடிட்டிங்ல ஆண்டனி மாதிரி ஆகணும்னு கனவு.

Source : Aanantha Vikatan