நடிகர் சிலம்பரசன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘‘சமீபகாலமாக என் சிந்தனைகளில் அபரிமிதமான மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. ஆன்மிக ஈடுபாடு என்னுடைய மாற்றங்களுக்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறேன். அதில் அதி
முக்கியமானதாக, ‘யங் சூப்பர்
ஸ்டார்’ என்ற பட்டத்தை இனிமேல் பயன்படுத்த
மாட்டேன். இனிமேல், என் படங்களின்
டைட்டில்களில் அந்த பட்டம் இடம்பெறாது.
இந்த தேவையற்ற சுமைகளை என் வாழ்வில் இருந்து அகற்ற முடிவு செய்து இருக்கிறேன். என்னுடைய
திரை வாழ்வில், நான் முக்கியமான
கட்டத்தை எட்டி இருக்கிறேன். என்னுடைய ‘இமேஜ்,’
அது என் ரசிகர்கள் இடையே ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றை
முக்கியம் என்று உணர்ந்து வருகிறேன்.
முதல் வழி
சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவன் என்ற முறையில்,
முக்கியத்துவம் இல்லாத பட்டங்கள் வளரும்
கலைஞனுக்கு அவசியமற்றது என்று கருத ஆரம்பித்து இருக்கிறேன். திரையில் என் மீது அன்பு
கொண்டவர்களை தாண்டி, எல்லோருடைய அன்பையும், மரியாதையையும் பெற வேண்டும் என்ற எண்ணம்
மேலோங்கி வருகிறது. பட்டம் துறப்பது என்ற என்னுடைய இந்த முடிவு, அதற்கான முதல் வழியாகும்.
என்னுடன் என்றென்றும் இருக்கும், இருக்கப்போகும் என் இனிய ரசிகர்கள் இந்த முடிவை ஏற்று
ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.” இவ்வாறு
அந்த அறிக்கையில் சிலம்பரசன் கூறியிருக்கிறார்.