பெரும் எதிர்பார்ப்பில் 'இது நம்ம ஆளு'




பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து வரும் 'இது நம்ம ஆளு' படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி தொடங்கியிருக்கிறது. பாண்டிராஜ் - சிம்பு இணைப்பில் முதலில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. சிம்பு, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கினார்கள். சிம்புவே தயாரித்து வரும் இப்படத்திற்கு அவரது தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார். 

நயன்தாரா நாயகியாக என்றைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாரோ, அன்று முதல் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் புகைப்படங்கள் அனைத்திலும் சிம்பு - நயன்தாரா இருப்பது போன்று வெளியிட்டார்கள். தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தர்கள் அனைவருமே 'இது நம்ம ஆளு' படம் எப்போது என்று எதிர்நோக்கி இருக்கிறார்கள். 90% படப்பிடிப்பு மற்றும் 2 பாடல்களை படமாக்கி முடித்து இருக்கிறார்கள். ஒரு புறம் டப்பிங் பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இப்படத்தில் முதன் முறையாக சிம்புவுடன் இணைந்து காமெடியில் இறங்கியிருக்கிறார் சூரி. அதுமட்டுமன்றி சந்தானமும் இப்படத்தில் கெஸ்ட் ரோலிஸ் நடிக்க இருக்கிறார்

Source : The Hindu [Tamil Edition ]