திரிஷா தனது பிறந்த தினத்தை சமீபத்தில் கொண்டாடினார். இதில் பங்கேற்க தனது நெருங்கிய நண்பர்கள், தோழிகளை அழைத் -திருந்தார்.திரிஷாவின் எதிரி என்று சொல்லப்பட்டு வந்த நயன்தாரா முதல்
நபராக
பிறந்தநாள் விழாவுக்கு வந்தார். அவரை கட்டித்தழுவி திரிஷா வரவேற்றார்.தொடர்ந்து அமலா பால், ரம்யா கிருஷ்ணன்,சிம்பு, சோனியா அகர்வால் உள்பட தோழிகள், நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினார்கள். ஹன்சிகாவுக்கும் திரிஷா அழைப்பு விடுத்திருந்தார். அவரால் விழாவில் பங்கேற்க இயலவில்லை என்று தகவல் தெரிவித்ததுடன் திரிஷாவுக்கு
வாழ்த்து
தெரிவித்து பூச்செண்டும், கேக்கும் அனுப்பினார். நள்ளிரவு 12 மணிக்கு திரிஷா கேக் கட் செய்தார். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைவருக் கும் விருந்தளித்தார் திரிஷா. சிம்புவும் நயன்தாராவும் காதலர்களாக இருந்து பிரிந்தவர்கள். சில
ஆண்டுகள் இவர்கள் பேசாமல் இருந்தனர். ஒருமுறை
ஐதராபாத் ஓட்டலில் சந்தித¢தபோது இவர்களுக்குள் மீண்டும் நட்பு மட்டும்
மலர்ந்தது. இதையடுத்து இப்போது இருவரும் சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் திரிஷா வளர்க்கும்
சோயா, ஸ்ரோ ஆகிய 2 செல்ல நாய்குட்டிகளும்
கலந்துகொண்டன.
- TAMIL
MURASU News Paper Dated 7th MAY 2014