சிம்பு படத்துக்காக காத்திருக்கும் கல்லூரி பெண்கள்! - தினமலர்



தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல நடிகர்கள் பின்னர் ஹீரோவாக வெற்றி பெற்றதில்லை. ஆனால் சிம்பு ஹீரோவாகவும் வெற்றி பெற்றார். அதோடு, நடிப்பு என்ற வட்டத்திற்குள் மட்டுமே நிற்காமல் இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகம் காட்டி வருகிறார். அவர் அறிமுகமான காலகட்டத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினார்.


சமீபகாலமாக அவரது மார்க்கெட் மந்தமாகத்தான் உள்ளது. இரண்டு வருடங்களாக அவர் ஹீரோவாக நடித்த எந்த படமும் திரைக்கு வரவில்லை. இந்தநிலையில், அவர் தயாரித்து நடித்து வரும இது நம்ம ஆளு படம் விரைவில் திரைக்கு வரத்தயாராகிக்கொண்டிருக்கிறது. பொங்கல் அன்று அப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிடுகிறார்கள்.


இந்த நிலையில், சிம்புவின் படத்தை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக ஏராளமான கல்லூரி பெண்கள் சிம்புவை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு உற்சாகம் கொடுத்து வருகின்றனர். அந்த அளவுக்கு சிம்புவின் நடிப்பை ரசிக்க ஒரு பெரும் இளைஞிகள் கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது. இது சிம்புவுக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்துள்ளதாம். அதிலும் சில பெண்கள், எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் எங்களுக்கு என்றென்றும் நீங்கள்தான் இளைய சூப்பர் ஸ்டார் எனறும் சொல்லி சிம்புவுக்கு புதிய எனர்ஜியை கொடுத்துள்ளார்களாம். அதனால், நீண்ட நாளைக்குபிறகு தான் நடித்து திரைக்கு வரும் இது நம்ம ஆளு படம் ஓடும் தியேட்டர்களுக்கு கல்லூரி பெண்களே கூடடம் கூட்டமாக வந்து படத்தை ஓட வைத்து விடுகிறார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் சிம்பு.


Source : தினமலர்

சிம்புவுக்காக டப்பிங் பேசிய நயன்தாரா




முதல்முறையாக தமிழில் பின்னணி பேசி நடித்திருக்கிறார் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த நயன்தாரா, ஐயா படம் மூலம் தமிழில் அற¤முகம் ஆனார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கிறார். ஆனால் இதுவரை சொந்த குரலில் டப்பிங் பேசியதில்லை. ஆனால் இப்போது முதல்முறையாக டப்பிங் பேசி நடித்திருக்கிறார். அதுவும் சிம்பு கேட்டுக்கொண்டதால்.



'வல்லவன்' படத்தில் நடித்தபோது நயன்தாரா-சிம்பு இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் நீண்ட நாள் நீடிக்கவில்லை. சீக்கிரமே முடிவுக்கு வந்தது. அதன்பிறகு சிம்புவை சந்திப்பதை நயன்தாரா தவிர்த்து வந்தார். இந்நிலையில் ஒருமுறை ஐதராபாத்தில் சந்தித்த இவர்கள், தங்களது நட்பை புதுப்பித்துக்கொண்டனர். இப்போது இருவரும் சேர்ந்து 'இது நம்ம ஆளு' படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை சிம்புவே தயாரிக்கிறார். அவரது தம்பி குறளரசன் இசையமைக்கிறார். பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்துவிட்டன. 


இதனால் அவரது காட்சிகளுக்கு டப்பிங் முடித்துவிடலாம் என படக்குழு எண்ணியது. அவரே டப்பிங் பேசினால் நன்றாக இருக்கும் என சிம்பு சொன்னாராம். பிறகு நயன்தாராவிடம் அவர் கேட்டதும், மாஜி காதலன் கேட்பதால் அவரால் மறுப்பு சொல்ல முடியவில்லையாம். உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இதையடுத்து அவர் படத்துக்கு டப்பிங் பேசி வருகிறார்.

Source: TamilMurasu